youtube

Sunday, June 30, 2013

மந்திரங்கள்

மந்திரங்கள்

வாய்மையை  வாழ்க்கையில்  கடைபிடித்து வாழும் உத்தம மனிதரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரங்கள்  தான் .
தற்காலத்தில் புத்தகங்களிலும்  , இனணய தளதிலும் பலவிதமான மந்திரங்களை வெளியிடுகின்றனர்.இந்த மந்திரங்களை கூறினால் பலன் கிடைக்குமா? சந்தேகம்தான் ! மந்திரம்  யாருக்கு சித்தியாகும் ? என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை   முன் கட்டுரையில் பார்த்தோம் . அவ்வாறு இல்லா விட்டால் போலி வேடமிட்டு ,பிறர் பொருளை அபகரித்த பாவதிற்குரிய தண்டனையை அடைவார்கள் .இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால்
என்பார்கள்.

மதி என்றால் சந்திரன்,  சந்திரன் மனதிற்குரியவன், மன வலிமை வேண்டும் .அடியேன் என் குருநாதரிடம் " சாமி பல லட்சம் உரு ஜெபித்தாலும் புத்தகத்தில் எழுதிருப்பதைப்  போல் பலன் நடைபெறவில்லையே   ஏன் ? என கேட்டேன் அதற்கு அவர் " அட்சரலட்சம் " என்றார் . மந்திரம்  ஜெபித்து சித்து அடைய சில நியமனங்கள் உள்ளன .  அவைகளில் ஒன்று  ஆகார  நியமணம். இதை பற்றி முன்  கட்டுரையில் கண்டோம் .

             மந்திரத்தை 1 லட்சம் உரு ஜெபித்தாலும் அதில் 10 ல் ஒரு பகுதி தர்ப்பணம் செய்யவேண்டும் ,10 ல் ஒரு பகுதி ஹோமம்  செய்யவேண்டும் .  அப்படி இல்லாவிட்டால் அதைபோல் 4 மடங்கு அதாவது 1 லட்சம் என்றால் 4 லட்சம் மொத்தம்  5 லட்சம் உரு நியமனத்துடன் ஜெபிக்கவேண்டும் .இவ்வளவு கஷ்டம் இருக்கும்போது "நீ பணத்தை கொடு நான் தெய்வத்தை காட்டுகிறேன் என்று ஒருவர் சொன்னால் எப்படி நம்புவது? அப்படி ஏமாந்த சிலரையும்  அடியேன் சந்தித்து இருகின்றேன்  .

 " மந்திரங்கள் 100 சதவீதம் உண்மை.மந்திரங்கள் பலிக்கவில்லை என்றால் அது ஜெபித்தவருடைய  தவறே  தவிர  மந்திரந்தின் தவறே அல்ல .

       மந்திரம் என்றால் மனதில் திறம் என கூறுவார்கள். மனதை ஒருநிலை படுத்தி சொல்லும்போது மந்திரம் நிச்சயமாக பலிக்கும் . உதாரணத்திற்கு   ஒரு மந்திரம் தருகிறேன்.இந்த மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் பிறர் நம்மைக்கண்டு  வசியமாவதொடு, நம் கட்டளையை ஏற்று நடப்பார்கள் .

" ஓம் சக்தி ,உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி ,சித்த சக்தி ,வாக்கு  சக்தி, வசிய சக்தி, எண்ணிய எண்ணம் எண்ணியபடியே ,என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும் ,என்னை நினைத்தோர்
என் வசம் ஆகவும் ,என்சொல் கேட்டு இசைந்தே நடக்க ,நானே நீயாய் ,நீயே நானாய் செய் " (இதற்குரிய செயல்முறை விளக்கத்தை வெளியிட்டால் சிலர் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக செயல்முறை விளக்கம் வெளியிடவில்லை )

   " மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டம் "   

நலமே பெற்று! வளமாய் வாழ்க !

Wednesday, June 12, 2013

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா  மஹா மந்திரம்.


 ஓம், ஹிரீம், க்லீம்,  ஐம் பிரம்மி ,மகேஸ்வரி ,கௌமாரி ,வைஷ்ணவி ,வாராஹி , இந்த்ராணி ,சாமுண்டே ,சித்தசாமுண்டேஸ்வரி  ,கணேஷ்வரி ,ஷேத்ரபால, நரஷிம்கி ,மகாலக்ஷ்மி சர்வதோ , துர்காயை ஹும்பட் சுவாஹா .

Friday, June 7, 2013

   மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

           மந்திர ஜெபம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆகார நியமனங்கள் , தித்திப்பு ,உப்பு புளிப்பு ,எண்ணெய் ஆகியவைகளை தள்ளி விடவேண்டும்.தாம்பூலம் , பித்தளை பாத்திர போஜனம் ,பகல்   போஜனம் ,ஸ்திரி சங்கமம் .அதை பற்றிய பேச்சு ,கூட்டம் ஆகியவற்றை விளக்க வேண்டும் .

                        தரையில் படுக்கை ,பிரமச்சரிய விரதம், மௌனம் குருசேவை ,நித்ய நித்ய பூஜை ,நித்ய தானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும் கீர்த்தனமும் ,மூன்று வேளை ஸ்நானம் ,தாழ்ந்த செயல்களை விளக்குதல் ,குரு ,தெய்வ பக்தி ஆகியவை மந்திர
சித்தி அளிக்கும் . 

Thursday, June 6, 2013

  மந்திரங்கள் உண்மையா?

எனது குருநாதர் கூறுவார் 'மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக இருக்கிறது' என்பார். முன்பு  ரஷ்யாவில் மந்த்ரங்கள் உண்மையா என ஆராய்ச்சி நடத்தினர்.ஒரு ஒலி நாடாவில் வேத மந்த்ரங்களை பதிவு செய்தனர் .அதே
 ஒலி நாடாவில் மனிதர்கள் பேசும் பேச்சுகளையும் பதிவு செய்து வானமண்டலத்தில் (காற்றில்லா இடத்தில் )ஒலிக்கச் செய்ததில் வேதமந்த்ரங்கள் பூமியில் ஒலித்த அதே சப்தத்தில் ஒலித்தது .ஆனால் சாதாரண
 சப்த்தங்கள் எதுவும் கேட்கவில்லை
              ஆதி காலத்தில் குருமார்கள் .வாய் மூலமே சரியான உச்சரிப்புடன்
சீடர்களுக்கு  உபதேசித்திதனர்.முறையாக வேதம் பயின்றவர்கள் சொல்லும்
மந்திரம்  பலிக்கிறது.அவர்களுக்கு சில நியமனங்கள் உள்ளன . அதை கடைபிடிக்கவிடில் அவர்கள் சொல்லும் மந்திரம் பலிக்காது .( தொடரும்)

Wednesday, June 5, 2013

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.
    
          

Tuesday, June 4, 2013

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.


(தொடரும்) 

Sunday, June 2, 2013

பணத்தின்மீது  பேராசையும்

பாவையிடத்தில் இச்சையும்

இல்லாதவரே உண்மையான ஞானி 
இல்லறத்திலும் ஞானி உண்டு ,

துறவியிலும் மூடன் உண்டு