youtube

Sunday, December 29, 2013

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .
நம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .
ஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிறார்கள்  அடுத்து .முனி  இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்
அடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர  வூ  டோ  குய் ,
பா ஜீ  யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள் 

Friday, December 27, 2013

யாஹம் ..........
கூடாது
....................யாஹம் செய்ய முக்கியமாக மூன்று பொருட்கள் வேண்டும் .அவை
அவை சமித்து ,அன்னம் ,ஆஜ்யம் ,,சமித்து என்பது யாகம்செய்யும் தெய்வங்கலுக்கா க உகந்த மரங்களில் இருந்து எடுக்கப்படும் குச்சிகள் ,அன்னமென்பது அவிஸ் என்பார்கள் இதில் நெய் சேர்க்கவேண்டும் நெய்
அன்னத்தை சுத்திசெய்யும் .அடுத்து ஆஜ்யம் என்பது நெய் இந்தமூன்றும் முக்கியம் வேண்டும் .,அடுத்து தர்பை இது பூஜைகளுக்கும் யாகங்களுக்கும்
முக்கியமாக வேண்டும் .வென்கடுகையும் தர்பைநுனி களையும் துரத்த
பயன் படுத்துவார்கள் .'யாககுச்சிகள் சுண்டுவிரல் கணம் தான் இருக்கவேண்டும் வெட்டினால் பால்வரக்கூடிய மரங்களை தான் ,யாகத்தில்
இடவேண்டும் சில நூல் களில் ,வேம்பு ,மாமரம் ,கருவேல மரம் இவைகள்
என்று காணப்படுகிறது .ஆலமரம் ,அரசமரம் ,எருக்கு குச்சிகள் எரித்தால்
கரியாக இல்லாமல் பஸ்பம் ஆகிவிடும் .வேப்பமர குச்சியும் வேப்பெண்ணைய் யும் ,மாரனகாரியங்களுக்கு பயன்படும் ,ஊமத்தை பேதன
காரியங்களுக்கு பயன்படும் .அரசு ராஜாங்க காரியம் வெற்றிபெற உதவும்
வேறு குச்சிகள் கிடைக்காதபோது அரசங்குச்சி கள் பயன்படுத்தலாம்
மேலும் மஞ்சள் ,கஸ்துரி மஞ்சள் ,அக்கினி பகவானுக்கு உகந்த
பச்சை கற் பூரம் ,மேலும் ,துளசிமணி ,தாமரைவிதை ,தேன் ,மற்றும் பலபொருட்களை இடலாம் 

Thursday, December 26, 2013

அன்பர்களே ஒருவரின் ஜனனஜாதகத்தில்  ,,மூன்று ,,ஆறு ,,,பத்து ,,பதினொன்றில் சூரியன்  இருந்தால் அவருக்கு ஜீவனயோகம் சிறப்பாக அமையும் தொழில் மூலம் ஏராளமான பொருள் ,சம்பாதிப்பார் ..பூச நட்சேத்திரத்தில் பிறந்தவர்கள் ,பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள்
பணம் உள்ளவர்களையே மதிப்பார்கள் சனியின் சாரத்தில் பிறந்த இவர்கள் முகத்தில் கடுமயும் சோகமும் காணப்படும்

கறிவேப்பிலையை  பச்சை யாக சாப்பிட்டால்  சர்க்கரை நோய் குணமாகும்
வெந்தையத்தை இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஊற வைத்து ,மறுநாள் காலையில் வெறும்வயிற்றில் ,குடித்தால் சர்க்கரை நோய் தீரும் .

அண்ணாச்சி நறுக்கி அதில் ஓமத்தை வறுத்து பொடி செய்து அதில் போட்டு
சாப்பிட்டால் உடல் மெலியும் .

தோசைக்கு மாவு ஆட்டும் போது பிஞ்சு வெண்டைக்காயை இரண்டு சேர்த்து
ஆட்டினால் தோசை பிய்ந்து போகாமல் வரும் 

Tuesday, December 24, 2013

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும் .

ஸ்காந்த புராணத்தில் உள்ள சுக்ராச்சாரியாரால் சொல்லப்பட்ட மங்கள ஸ்தோத்திரம் சொன்னாலும் கடன் தீரும் .

செல்வம் கிடைக்க ஸ்ரீ சூக்தம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லக்ஷ்மி ,நாராயண ஹிருதயம் ,மற்றும் லக்ஷ்மிகுபேர தனாகர்ஷண மந்திரம் இவைகளில்
ஏதாவது ஒன்றை ஜெபித்தாலும் நல்லபலன் உண்டு

கடன்விரைவாக தீர 3 ,5,,,7,,என்ற எண்ணிக்கையில் குதிரைகள் படத்தை வீட்டை விட்டு வெளியே ஓடுவது போல் அமைத்தால் விரைவில் கடன் தீரும்

கடைகளில் வியாபாரம் அதிகரிக்க கடையின் வடமேற்கு மூலையில் சஞ்சீவி மலையை தூக்கிசெல்லும் அனுமான் படம் வைத்தால் ,வியாபாரம் பெருகும்

வீட்டில் ,பருத்தி ,அகத்தி ,பனை ,நாவல் ,எருக்கு ,அத்தி ,ஆல் ,அரசு ,புளி
போன்ற மரங்கள் வளர்க்க கூடாது .
பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1  செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைசார்ந்தவர்கள் உன்னிடம் பற்று உடையவர்களாய் இருப்பார்கள் .அதன்பிறகு வயதான காலத்தில் உன்னிடம் ஒருவரும் பற்றுவைக்க மாட்டார்கள்
2   உன்னுடைய மனைவி யார்//?மகன்யார் ?நீயார் ? எங்கிருந்து வந்தாய் ?இதை எண்ணிப்பார்  ..
3  இளமை செல்வம் இவைகளை பற்றி அகந்தை கொள்ளாதே சிலநொடிகளில்
யமன் கொண்டுபோய் விடுவான் எண்ணிப்பார்த்து இறைவனை நாடு
4  சடை வளர்த்தவன் ,தலை மழித்தவன் ,காவிதுணி கட்டி வேடம் போடுபவன்
எல்லாம் வயிற்று பிழைப்புக்காகவே நடைபெறுகிரது
5  நான்யார் /  ?நீயார் ?எங்கிருந்து வந்தாய் உலகம் கனவு போன்றது .
[எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு ,தனக்குத்தாய் நாடியே சென்றாள் ...அப்பன் எத்தனை அப்பனோ ? பிள்ளை எத்தனை பிள்ளையோ
முன்னமெத்தனை பிறவியோ ] பட்டினத்தார் ..
இரை தேடுவதோடு ,இறையையும் தேடு 

Monday, December 23, 2013

அன்பர்களே தசமஹாவித்தை என்றுஒன்று உள்ளது இதை சக்தி உபாசகர்கள்
நன்கு அறிவார்கள் அந்தபத்து உபாசனைகளிலும் தூமா தேவி என்று ஓர் தெய்வம் உண்டு .அவள் கணவன் இல்லாத விதவை காக்கை கொடி உடையவள் கலக்கம் செய்வதல் பிரியம் உள்ளவள் .மாந்திரத்தில் பிரிவினை செய்ய இவள் உதவி செய்வாள் .அதற்கு உரிய எ ந்தி ரத்தை  வரைந்து பூஜைகள் செய்து மயானத்தில்புதை க்க  எதிரிகள் பிரிவார்கள் ....நண்பர்களே
நல்லமந்திரங்களை முழுவதும் தருவேன் .இதை போன்ற தீய மந்திரங்களை
வெளி இட மாட்டேன்   நலமேபெற்று   வளமாய் வாழ்க ... 
பரிகாரம் என்ற பெயரில் பணத்தை வீணாக்காதீர்கள் .நண்பர்களே ஒரு பெண் ஜாதகம் பார்க்க வந்தார் .அப்போது அவரது ஜாதகத்தில் கேது திசை நடந்து கொண்டிருந்தது பாக்கி இரண்டு வருடம் இருந்தது ,பலனைக்கூ றிவிட்டு ,உள்ளூர் பிள்ளையார் கோவிலில் சிலபரிகாரங்களை செய்யசொன்னேன் .
அதற்கு அந்தப்பெண் ,என்னசாமி இவ்வளவு லேசாக சொல்லிவிடீர்கள் என்று கேட்டார் பிறகு ,சாமீ நான்முதலில் ஒருவரிடம் ஜாதகத்தை காட்டினேன் ,அவர் திருநாகேஸ்வரம் குடும்பத்தோடு சென்று பாலாபிசேகம் செய்யசொன்னார் ,அப்படி செய்தும் பலனில்லை அடுத்துஒருஜோதிடர்
அவர்சொன்னது தவறு குடும்பத்தோடு காலஹஸ்தி போய்வாருங்கள் என்றார் அதையும் செய்துவந்தோம் அப்படியன் பிரச்னை தீரவில்லை
மூன்றாவதாக ஒருவர் ,திருசெந்தூர் சென்று கடைசி பையனின் எடைக்குஎடை சர்க்கரைவாங்கி கடலில் போட சொன்னார் அதையும் செய்தும் பலனில்லை என்றார் .அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நான் ,பரிகாரம் செய்தும் பலன் இல்லை .என்கிறீர்கள் ,நீங்கள் செலவழித்த பணத்தை சொன்னஜோதிடர்கள் கொடுப்பார்களா என்று கேட்டேன் திருமனன்சேரி சென்றுவந்தும் திருமணம் ஆகாதவர்கள் உண்டு ..பிறகு ஒருவர் அவரிடம் ஒருஜோதிடர் ,நீ இன்னுமிருபது நாட்களில் செத்து விடுவாய் திருக்கடை ஊர் சென்றுபரிகாரம் செய்யவேண்டும் என்றார் ,என்னிடம் கேட்டபோது வேண்டாம் என்று கூறிவிட்டேன் அவர்போகவில்லை ,அவரின்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ,,இன்னும்சொல்வேன் 
நண்பர்களே ,நீங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிடம் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள் ,ஆனால் அதனிடம் மிகுந்த பற்று வைக்காதீர்கள் ஒருகதை ,,ஒருகாட்டில் ஒருமுனிவர் ஆசிரமம் அமைத்து
வாழ்ந்துவந்தார் .அந்தாசிரமத்தில் ஒருநிரை மாதகர்ப்பம் ,மானொன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து போய் விட்டது .முனிவர் அந்த மான்குட்டிமீது
மிகுந்த பாசம்வைத்து வளர்த்துவந்தார் .அவர் இறக்கும் போது அந்த மான்குட்டி நினைவாகவே  இறந்ததால் அவர் மறுஜென்மத்தில் ஒரு மானாக
பிறந்தார் .ஆகவேநாயை வளரத்து மிகுந்த பாசம் வைத்தால் மறுபிறவியில் நாயாகவும் பிறக்கநேரிடலாம் .அதனால்தான் பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் கடவுளின் பெயர்களை வைத்தார்கள் ,இறக்கும்போது கடவுளின் பெயரை சொல்லி பிள்ளைகளை அழைக்கும் போதாவது ,நல்ல
சிந்தனை வரட்டுமே .
காகபலமார்க்கதர்மம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காகங்களை  கூட்டாக  வரவழைத்து அனைத்திற்கும் உணவு இட்டால் அது
காகபலமார்க்க தர்மம் ஆகும் இதனால் பிதுர்கள் மகிழ்வார்கள்  அத்துடன்
பிளவு பட்டுள்ள குடும்பம் ஓன்று சேரும் இதற்கு காகபூஜா பலன் உதவும் 
வணக்கம்     ,அன்பர்களே பக்தி உள்ளவர்களாய்  இருங்கள் ஆனால் பகுத்தறிவை இழக்காதீர்கள் இன்று கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் பல ஏமாற்றுகள் நடக்கின்றன .அப்படி ஏமாந்தவர்கள் பலரை சந்தித்து இருக்கிறேன் .ஒருவர் மதுரையிலிருந்து வந்தார் .,சாமி ஒருவர் என்னிடம் நன்றாக பழகி ,தனக்கு எல்லாம் தெரியும் என்று கூ றினார்
இன்னும் நம்பும்படியாக பலஆசை வார்த்தைகள் கூ றி ஒருலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு எதுவுமே செய்யவில்லை ,ஏமாற்றிவிட்டார் .ஆனால் வாராஹி அவருக்கு ஒரு விபத்தை ஏற்படுத்தி ,சுமார் இரண்டு லட்சத்திற்கு
செலவை ஏற்படுத்தி விட்டாள் .என்று கூ றினார் ஆகவே நண்பர்களே பணத்தைகொடுத்து பஹவானை விலைக்குவாங்கமுடியாது ,மனம் உருகி
பிரார்த்தனை செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு இன்னும்பல ஏமாந்த வர்கள் உண்டு நல்லகுருவை தேடுங்கள் .

Sunday, December 22, 2013

அன்பர்களே நமோ விஷ்ணு  மந்திரங்கள் சிலவற்றை கூ றுகிறேன் .விஷ்ணு மந்திரங்களில் நான் செய்துபார்த்து ,அனுபவித்து ,வெற்றிகண்ட மந்திரம்
லட்சுமி நாரா-யண ஹிருதயம்  இந்தமந்திரத்தை முறைப்படி பூஜை செய்தால் ,ஏழையும் பணக்காரனாகலாம் குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்கும் நம்விதியையம் -ஏஹி  மாற்றகூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு இதை நானின்கே குறிப்பிட காரணம் உங்களிடம் எதையம் எதிர்பார்த்து அல்ல ரிக்வேதத்தில் உள்ள இந்த மந்திரம் மகாசக்தி வாய்ந்தது .இதைமறுப்பது சுலபம் ,ஒரே வார்த்தையில் இல்லை என்று சொல்லிவிடலாம் ,ஆனால் உண்மை என்று நிரூபிக்க பதி னைந்து நாட்கள் பக்தியுடன் பாடுபடவேண்டும்
நம்பிக்கை உள்ளவர்கள் செய்துபார்த்து பலன் பெறுங்கள் அடுத்து ஹிரிஷிகேச மந்திரம் .
ஹ்ராம் ஓம் நமோ  பஹவதே ஹ்ருஷி  கேசாய  மஹா மாயாதி  நாதாய -
விஸ்வ ரூபே -எஹி ஏஹி தேவ தத் தஸ் எஸ்ட  ஹிரிசீகம்
=

விமோஹாய இஸ் ட்ட ஸ்தானம் -வாதய வாதய ,ரமய ரமய -நாதய நாதய -
லீனய லீனய உபேட்சய உபேட்சய -க்ரோதய க்ரோதய - பாயய பாயய
உத்பய -உத்பய அபீஸ்ட்ட ஸ்தானகம் சக்கரமாய சக்கரமாய சாலய சாலய ப்ரதய ப்ரதய ஹிரீம் ஸ்ரீம் வாஸுதேவாய ப்ருஹ்மானந்தாய ப்ருஹ்ம பூர்ணாய சுவாஹா '

nalame petru valamaai vaalka

குழந்தை செல்வம் வேண்டுவோர் இரண்டு மாதம் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு தினமும் சத்தான உணவு உண்டு ,சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் சொல்லி வெண்ணெய் மந்திரித்து தம்பதிகள் காலையில் வெரும்வயற்றில் உண்டுவந்து இரண்டு மாதம் கழித்து ,மனைவீவியின் கர்ப்பகாலமறிந்து உறவு கொள்ள குழந்தை பிறக்கும்
ஒம்தேவஹி ஸுத கோவிந்த வாசுதேவ ஜெஹத்பதே
தேஹிமே தனயம்  கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத ,
தேவதேவ  ஜெஹன்நாத  கோத்ர  விருத்தி  கரோ பிரபு
தேஹிமே தனயம் ஸுக் ரம்  ஆயுஷ் மந்தம்  யசஸ் வீனம்
  இது கிருஷ்ண மந்திரம் 

Saturday, December 21, 2013

ஐந்தாம் பகுதி மனிதபிறவி எவ்வாறு ஏற்படுகிறது ,,ஆணுடைய இந்திரியமானது எண்பது துளிரெத்தம் சேர்ந்து ஒருதுளி இந்திரியம் ஆகிறது.ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது எத்தனையோ துளி இந்திரியம் வெளி ஏறுகிறது .இந்த இந்திரியங்களுக்கு காரணமான இரத்தம் உணவு உண்பதால் கிடைக்கிறது .இப்போது விசயத்திற்கு வருகிறேன் ..
வானமண்டலத்தில் அல்லது ,ஆகாயத்தில் பிறவி எடுக்கவேண்டிய ஆத்மாக்கள் நிறைந்து இருக்கின்றன .அந்த ஆத்மாக்கள் பிரவிஎடுக்கவெண்டிய காலத்தில் மழை துளி வழியாக தானியங்களில் சேருகின்றன .அந்ததானியத்தை மனிதன் உண்ணும்போது மனிதபிறவி கிடைக்கிறது மீதி உணவாக குப்பையில் சேர்ந்தால் ,அதைஉண்ணும் நாய் ,பன்றி போன்ற பிறவிகளும் அவனவன் கர்மா வுக்கு தக்கபிறவி கிடைக்கலாம் ,விளை நிலத்தில் பறவைகள் உண்ணும்போது பறவையாய் பிறக்கநேரிடும்
இதை கண்ணதாசன் அவர்கள் ,தஞ்சாஊரில் விளையும் அரிசியில் கூட யாருக்குசேரவேண்டு மோ ,அவனுடைய பெயர் எழுதப்பட்டுவிடும் ,என்று கூறினார் விசயம் தெரிந்தவர்களுக்கு விவரம் புரியும்  
சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட பதினாறு நாட்கள் வரையில் என்னென்ன குழந்தை பிறக்கும் என்ற செய்தியை மட்டும் திருச்சி திருப்பராய்துறை ராமகிருஷ்ணா தபோவனம் வெளியிட்ட ,நன்மக்கள் பேறு என்ற புத்தகத்தில் இருக்கிறது ,கிடைத்தால் வாங்கி படியுங்கள் .அடுத்த பகுதிக்கு செல்வதற்குமுன் ஒருசரஸ்வதி மந்திரத்தை ,தருகிறேன் .இது ரிக்வேதத்தில் உள்ளது
சரஸ்வதி தேவநிதோ  நிபர்ஹய ,,,,ப்ராஜாம் விஸ் வஸ்ய  ப்ரு ஷயஷ்ய மாயினஹ   உதசிதிப்யோ  வனீர  விந்தோ விஷமேப்யோ   அ ஸ்ரவோ வாஜினீவதி .
இந்த மந்திரத்த்தை  பால்,நெய் ,தேன் கலந்து ஜெபம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் [தர்பைஇனால் தொட்டுக்கொண்டு ]]ஜெபம் செய்ய வேண்டும் .இதற்குமுன் ஒரு சரஸ்வதி மந்திரம் கொடுத்து இருக்கிறேன் படித்து பயன் அடையுங்கள் 
கர்பகாலம் [பகுதி நான்கு ] பெணகளுக்கு மாதவீடாய் ஆன மூன்று நாட்களுக்கு சுத்தம் இருக்காது ..நான்காம் நாள் உறவு கொண்டு பிறந்தால் அது குழந்தை .ஆனாஅந்த குழந்தை அற்ப ஆயுளுடன் இறந்துபோகும் ,இப்படி இரட்டை படை நாட்களில் பிறப்பது ஆண்குழந்தை யாகவும் ஒற்றைபடை நாட்களில் கருத்தரித்து பிறப்பது ,பெண்ணாகவும் இருக்கும் .இதில் எட்டு,அல்லது பத்து நாட்களுக்குமேல் கருத்தரித்து பிறந்தால் ,அந்தகுழந்தை
அறிவு,ஆரோக்கியம் தீர்க்கஆளுடன் வாழும் .இதிலும் ,பதினாறாம் நாள் கருத்தரித்து பிறந்தால் அவன் அரசனுக்கு நிகராக வாழ்வான் .என்று கூறப்பட்டு உள்ளது .பதினாராம் நாட்களுக்கு மேல் கற்பப்பை மூடிவிடும் .கருத்தரிக்க வாய்ப்புஇல்லை .அந்தகாலத்தில் கணவனை இழந்த இளம் பெண்கள் ஒருசிலர் பதினாறு நாட்களுக்கு மேல் ரகசியமாக தன் காதலனுடன் சேர்ந்து இன்பம் அநுபவிப்பார்கள் ..இந்த ரஹசியத்தை ,ராமகிருஷ்ணா தபோவனம் வெளிஇட்ட நன்மக்கள் பேரு என்ற நூலில் குறிப்பிட பட்டுள்ளது .
நண்பர்களே நான் தற்போது மலேசியாவில் இருக்கிறேன் .புதுவருடம் பிறந்து ஐந்து தேதிக்கு மேல் நான் தமிழகம் வருவேன் .எனக்கு இணையத்தை பற்றி எதுவும் தெரியாது .எத்தனை நண்பர்கள் என்றும் தெரியாது .முடிந்தால் ,அன்னை மெய்யறிவு தவநிலயத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து அறிமுகம் செய்யுங்கள் .எனக்குதெரிந்த விவரங்களை எழுதுகிறேன் .வணக்கம் .

entru

பகுதி மூன்று ]] நிசேஹம்  அன்பர்களே பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பகுதியில்நிசேஹம் என்று குறிப்பிட்டு இருக்கும் அதில் ஆண் ,பெண்உடலுறவு கொள்வதற்கான நல்லநேரம் குறிப்பிட்டு இருக்கும் ,அந்தநேரத்தில் உறவுகொண்டால் நல்லசந்ததி கள்  பிறப்பார்கள் .அதற்கு எடுத்து காட்டு  சாலிவாஹனன் கதை .நீங்கள் விக்கிரமாதித்தன் கதை கேள்வி பட்டு இருப்பீர்கள் .காளிதேவியின் அருள்பெற ,அந்த  விக்கிரமாதித்தனையே வென்றவன் இவன் ..ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தார் ,,அவர் ,அப்படி தன் இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு ,மாலைக்குள் திரும்புவதாக கூறிவிட்டு வெளியூர் செல்கிறார் ..திரும்பி வரும்போது ,மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் .எப்படியாவது அக்கரைக்கு செல்லவேண்விக்கிரமாதித்தனை டும் என்று தவித்து கொண்டு இருக்கிறார் .அப்போது அங்கு உள்ளகுடிசையில் ,குயவர் ஒருவர்இவரிடம் ,சாமி வெள்ளமிப்போது குறையாது ,என்குடிசையில் தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் ,என்று ,கூரினார் .அதற்கு அந்த பிராமணர் ,ஐயா ,இன்று இரவு என்மனைவயுடன் சேர்ந்தால் ,சக்கரவர்த்திக்கு நிகரான மகன் பிறப்பான் ,அதுமுடியாமல் போய்விடுமோ என்று  அஞ்சுகிறேன் ,என்று கூறினார் .அதற்கு அந்தகுயவர் ,சாமி ,அப்படிஎன்றால் ,என்மகள் பருவம் அடைந்து இருக்கிறாள் ,அவளை நான் உங்களுக்கு கன்னிகாதானம் செய்து தருகிறேன் என்றுகூறி மணம்செய்து கொடுக்கிறார் .அந்தகுழந்தை தான் ,காளிதேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தனை வென்ற சாலிவாகனன் .இன்னும்வரும் 

Thursday, December 19, 2013

[பகுதி இரண்டு ]   அமெரிக்க நீதி மன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு ,
அழகான ஒரு தம்பதிகளுக்கு ,குரங்கின் சாயலாக ஒருகுழந்தை பிறந்தது ,ஆகவே சந்தேகப்பட்ட கணவன் அந்தகுழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்றும் ,தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவுதாகவும் கூ றி விவாகரத்து கேட்டான் .மனைவியோ தான் குற்றம்மற்றவள் என்று கூறி னாள்   இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி ,அவர்களுடைய ,படுக்கை அறையை பார்க்கவேண்டும் என்றார் .அதன்படி நீதிபதிக்கு அவர்களின் ,படுக்கைஅறை அவருக்கு காண்பிக்கப்பட்டது .அங்கே அவர்களின்
படுக்கை அறையில் இரண்டு ஜிப்சி குரங்குகள் கட்டிபிடித்தபடி உள்ள படம்
பெரிதாக அழகுக்காக  மாட்ட பட்டிருந்தது .அதை பார்த்த நீதிபதி அந்தப்பெண் குற்றம் அற்றவள் எனதிர்ர்ப்பு கூரினார் '.அடுத்து மலேசியாவில் ஒரு இளைஞன் எதற்கு ம் ,சிறுவிசயதிர்க்கும் அழுவான் ,அவனுடைய ஏனம்மா
இவன் இப்படி அழுகிறான் என்று கேட்டேன் ,அதற்கு அந்த அம்மாள் ,சாமி
இவன் என் வயிற்றில் இருந்தபோது ,என் மாமியாரின் கொடுமையால் ,நான் தனியாக அழுதுகொண்டு இருப்பேன் ,அதுதான் இவனும் சின்ன விசத்துக்கு
கூட இப்படி அழுகிறான் என்றாள் .ஆகவே கரு உண்டானபெண்களே ,மனதில் தீய எண்ணங்களை எண்ணாதீர்கள் .டிவியில் காட்டு மிருகங்களை பார்க்காதீர்கள் .நல்ல நிகழ்சிகளை பாருங்கள் அடுத்து இன்னும்வரும் .
நண்பர்களே இன்று   இளைன்ர்களிடையே   காணப்படும் சீர்கேடுகளுக்குக்காரணம் முதலில் பெற்றவர்களே ,அதற்குபிறகுதான் சமூகம் ,கிராமங்களில் பழமொழி ஓன்று கூ று வார்கள் ,அவரை போட்டால் துவரையா முளைக்கும்  என்பார்கள் .அதைபோல் தாய் தந்தை களின் குணமே பிள்ளைகளுக்கும் உண்டாகும் ,,கரு தந்தையின் கர்பத்தில் இரண்டு மாதமும்
தாயின் கர்ப்பத்தில்  பத்து மாதமும் இருக்கிறது ,இதை சீனர்கள் ஒரு வயதாக சேர்த்துகொள்வார்கள் ,ஆகவே பெற்றோர்களின் கருவில் இருக்கும்போது
அவர்களின் எண்ணங்களே குழந்தயை பாதிக்கிறது .அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை க்கு   அவளின் எண்ணங்கள் போய் சேருகிறது .
மகாபாரதத்தில் ,அர்ஜுனன் தன் மனைவி சுபத்திரைக்கு [பத்ம ] சக்கர வியுகத்தை உடைத்து உள்ளே புகுவதை மட்டும் சொல்கிறான் .சுபத்திரை தூங்கி விட்டதை அறிந்து ,வியூகத்தை உடைத்து வெளியே வருவதை பற்றி
சொல்லவில்லை ,ஆகவே அதை கருவில் உள்ள குழந்தை அபிமன்யு பாரதபோரில் வியுகத்தை உடைத்து உள்ளே சென்றவன் ,வெளியே வரமுடியாமல் மாண்டு போனான் அடுத்து ,கருவில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு நாரதரின் நாராயண மந்திர உபதேசத்தால் கருவிலேயே திருஉடையவரானார் ஆகவே நல்ல குழந்தை உருவாக பெற்றோரே முதல் காரணம் .அடுத்து ,அமெரிக்காவில் நடந்த ஒருவழக்கு ,,,,,
அன்பர்களே இப்போது லக்ஷ்மி மந்திரம் ஓன்று ,,இதை லக்ஷ்மி ஹிருதயம் என்று கூறுவார்கள் .இந்த மந்திரத்தை தினசரி இருபத்தி ஏழு முறை சொல்லவேண்டும் அத்துடன் வெள்ளி கிழமைகளில் மாலையில் விளக்குஏற்றி லக்ஷ்மி பூஜை செய்து நூற்றிஎட்டு முறை கூரி வந்தால் வீட்டில் லக்க்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
அந்தமந்திரம் இதுதான் ,,,,,,,,,,ஸ்ரீ தேவிஹி ,அம்ருதோத்   ,பூதா .கமலா  சந்த்ர செப்பானா ,,விஷ்ணு ,,பத்தினி ஸ  வைஷ்ணவிச  ,வராரோஹிச
சார்ங்கினி    ஹரிபிரியா  தேவ தேவி  மஹாலக்ஷ்மி ச சுந்தரி 

Saturday, December 14, 2013

நண்பர்களே  மந்திரங்களில் சாக்கிய நாமமந்திரம் என்று ஓன்று உண்டு ,நாம்சங்கல்பம் செய்வது போன்று  ,கேரளாவில் இதை சொல்கிறார்கள் சங்கல்பத்தை விட சுலபமானது .சரியாகவும் உள்ளது .அடுத்து ஒரு மந்திரம்
ஆம்ப்ரணவம் ,.................என்று தொடங்கும் இந்த மந்திரத்தை சித்தி செய்துகொண்டு சொன்னால்  நாம்நினைக்கும் காரியம் ,பன்னிரண்டு நாழிகையில் பலன் தெரியும் ,ஆனால் நான் செய்து பார்த்ததில் மூன்று நாட்களில் பலன் தெரிந்தது ,இந்தப் பிரணவ மந்திரத்தை சொல்லி வசியம் செய்ய வேண்டியவர்களுக்கு பாலில் மந்திரித்து கொடுத்தல் வசியம் ஆவார்கள் ,,சோம்பேறிகளுக்கு வெற்றிலை யில் மந்திரிட்து கொடுத்தால்
சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைவார்கள் .இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது . 

Monday, December 9, 2013

நண்பர்களே இதுவரையில் எழுதியவைகளில் ஏதாவது கடுகு அளவாவது பிடித்து இருந்தால் ஏற்று கொள்ளுங்கள் ,,அல்லது இவன் பைத்தியக்காரன் என்று தள்ளிவிடுங்கள்  கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் கூறினார் .இல்லை என்று சொல்வதற்கு ஆராய்ச்சி தேவை இல்லை ,,இருக்கிறது என்று சொல்வதுதான் கஷ்டம் அதைநிருபிக்க கஷ்ட்ட படவேண்டும் ,ஆகவே நல்லாசானை அணுகி பாடம்கேட்டு பயன் பெறுங்கள் இன்னும்மந்திரங்கள் வரும் .....நலமெபெற்று வளமாய் வாழ்க 
அன்பர்களே சென்ற கட்டுரையில் வாராஹியை பார்த்தோம் ,இப்போது வாலையை பார்ப்போம்  வாலைக்கு வட்டமும் முக்கோணமும் நடுவில் பீஜ எழுத்துகளை பதித்து சொல்லும் மந்திரம் ,,ஸ்ரீம் ஐம் கிலீம் சௌம் ,,,சௌம் கிலீம் ஐம் ,வாக்குவாஹினி வாலை பரமேஸ்வரி என் வாக்கிலும் மனதிலும்
நின்று பேசு .....இதில் வரும் ஐம் கிளீம் சௌம்   சௌம் கிலீம் ஏன்ற மந்திரத்தை
ஒரு லட்சம் ஜெபித்தால் அன்னையின் நூபுர சப்தம் ஜெபித்தவர்களின் வீட்டை சுற்றி கேட்கும் .அத்துடன் இந்த யந்திரத்தை சிறிய அளவில் செய்து நம்முடன் வைத்துகொண்டால் வாக்குசித்தி ,,வசியம்மும் ஏற்படும் ..

Sunday, December 8, 2013

வாராஹி .......வாலை
தோராத வட்ட முக்கோண  ஷட்கோண துலுங்கு வட்டத்துள் சக்தி
ஈராறு இதழ்ளிட்டு ரீங்காரம் உள்ளிட்டு நடுவே
ஆராதனை செய்து பூசித்து அடிபணிந்தால்
வாராதிராலல்லவே வாலை ஞான  வராஹியுமே ,,,,வராஹிமாலை
வட்டத்தில் பன்னிரண்டு கமலமிட்டு அதிலே நவகோணம் நடுவெ ரீங்காரம் இட்டு பூசித்தால் அன்னைவாராஹி தோன்றுவாள் .அவளை சித்து செய்தால்
கோர்டமாணிக்கம் விவகாரம் எதிரி நாசம் உண்டாகும் இது அனுபவ உண்மை .ஜெஹன் மாதாவான பரமேஸ்வரி வசிய  காலத்தில் வாலையாகவும் ,போர்காலத்தில் வாராஹியாகவம் காட்சி அளிப்பாள் .அந்தவாராஹி மந்திரம் இதுதான்
ஓம் ஓங்கார ரீங்கார வாலை ,,ஐம்  கிலீம் சௌம்   ,திரிபுரை புவனை
சௌம் கிலீம் ஐம் ,,சத்துரு சம்ஹாரி ,,விசுகுறி ,பாராசம்  சொரூபி குண்டலி
சக்தி மகாமோட்ச குருகுரு  ஓம் சிவயவசி வசியசிவ இதை விசயம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் துன்பம் ஏற்படும் .
இதில் சிவயவசி வசியசிவ என்பதை இருதலை மாணிக்கம் என்பார்கள்
அடுத்து வாளைவசியம் 

Wednesday, December 4, 2013

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய ,,ஒம்நகாராயநமசிவாய ,,ஒம்மகாராய நமசிவாய ,,,ஒம்சிகாராய நமசிவா,,ய ,,,,ஓம்வகாராய நமசிவாய ,ஒம்யகாராய நமசிவாய ஒம்நம ,ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய
சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா ......இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது ,எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் ,சகல துன்பங்களும் இல்லமல் போகும் ,பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும் ..சொல்லிபாருங்கள் பலன் உண்டு
நலமே பெற்று ,,,வளமாய் வாழ்க 
அன்பர்களே சிலமந்திரங்களை பற்றி எழுதுகிறேன் முதலில் கணேசமந்திரம்
கணேசகாரியசித்தி மந்திரம்
ஓம் ஐம் ஹிரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹிரீம் ,சர்வகாரிய விக்ன பிரசம்னாய சர்வ
ராஜ வசீகரனாய ,சர்வ ஸ்திரீ புருசாகர்சனாய ,சர்வ லோக வசீகரனாய ஆம் ஹிரீம் குரோம் ஹூம்பட் ஸ்வாஹா ஸ்ரீ சித்த கணபதேய நமஹ பாதுஹாம் பூஜயாமிநமஹ,தர்பயாமி நமஹ .இநத மந்திரத்தை ,காலை,மாலை சொல்லிவர காரியத்தடை நீங்கும் அரசகாரியம் வெற்றி அடையும் வியாபார ஸ்தலங்களில் சொல்லிவர வியாபாரம் விருத்தி ஆகும் .அனுபவ சித்தி உடையது
அடுத்து சிவமந்திரம் 

Monday, December 2, 2013

பஹவானுக்கு எதைபடைப்பது ////
இந்தக்குழப்பம் பலருக்குவரும்  நீங்கள் எதை அன்போடு கொடுத்தலும் ஏற்றுக்கொள்ள காத்துநிர்க்கிறார் .அன்புதான் முக்கியம் வேடன் கடித்துகொடுத்த எச்சில் மாமிசத்தை சிவன் ஏற்றுக்கொண்டார் ,சபரிகடித்து கொடுத்த கனியை ராமர் அன்போடு ஏற்றுக்கொண்டார் ,ஆனால் நீங்களும் அதைப்போல செய்யாதீர்கள் ,அதற்க்கு  சரணாகதி தத்துவம் பக்தியில் இருக்கவேண்டும் என்றாலும் உங்கலால்முடிந்ததை அன்போடு கொடுங்கள் அதுபோதும்மனமேமுக்கியம் . அடுத்து மனதூமை முக்கியம்
பால் கன்று குட்டியின் எச்சில் தேன் தேனீன் எச்சில் புனுகு ,புனுகுபூனையின் பின்புறம் ஆசனவாயில் கிடைக்கிறது அதைஏற்றுகொள்ளும் பகவான் நீஅன்போடு கொடுப்பதை நிச்சயம் ஏற்று கொள்வார் ,,,லலிதா ஷகசர நாமத்தில் பாவணை கம்யாயை நம என்று வரும் ,அதற்க்கு பாவனையில் மகிழ்பவள் என்றுபொருள் .கண்களை மூடிக்கொண்டு ,புருவமதில் நினைவை நிறுத்தி ,ஒரு இலை தாமரை மலராக பாவித்து கொடுத்தல் அப்படியே ஆண்டவன் ஏற்று கொள்கிறார் ,,,,,,,,பக்தி உள்ளவனாய் இரு .ஆனால் பகுத்தறிவை இழக்காதே