youtube

Monday, December 23, 2013

பரிகாரம் என்ற பெயரில் பணத்தை வீணாக்காதீர்கள் .நண்பர்களே ஒரு பெண் ஜாதகம் பார்க்க வந்தார் .அப்போது அவரது ஜாதகத்தில் கேது திசை நடந்து கொண்டிருந்தது பாக்கி இரண்டு வருடம் இருந்தது ,பலனைக்கூ றிவிட்டு ,உள்ளூர் பிள்ளையார் கோவிலில் சிலபரிகாரங்களை செய்யசொன்னேன் .
அதற்கு அந்தப்பெண் ,என்னசாமி இவ்வளவு லேசாக சொல்லிவிடீர்கள் என்று கேட்டார் பிறகு ,சாமீ நான்முதலில் ஒருவரிடம் ஜாதகத்தை காட்டினேன் ,அவர் திருநாகேஸ்வரம் குடும்பத்தோடு சென்று பாலாபிசேகம் செய்யசொன்னார் ,அப்படி செய்தும் பலனில்லை அடுத்துஒருஜோதிடர்
அவர்சொன்னது தவறு குடும்பத்தோடு காலஹஸ்தி போய்வாருங்கள் என்றார் அதையும் செய்துவந்தோம் அப்படியன் பிரச்னை தீரவில்லை
மூன்றாவதாக ஒருவர் ,திருசெந்தூர் சென்று கடைசி பையனின் எடைக்குஎடை சர்க்கரைவாங்கி கடலில் போட சொன்னார் அதையும் செய்தும் பலனில்லை என்றார் .அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நான் ,பரிகாரம் செய்தும் பலன் இல்லை .என்கிறீர்கள் ,நீங்கள் செலவழித்த பணத்தை சொன்னஜோதிடர்கள் கொடுப்பார்களா என்று கேட்டேன் திருமனன்சேரி சென்றுவந்தும் திருமணம் ஆகாதவர்கள் உண்டு ..பிறகு ஒருவர் அவரிடம் ஒருஜோதிடர் ,நீ இன்னுமிருபது நாட்களில் செத்து விடுவாய் திருக்கடை ஊர் சென்றுபரிகாரம் செய்யவேண்டும் என்றார் ,என்னிடம் கேட்டபோது வேண்டாம் என்று கூறிவிட்டேன் அவர்போகவில்லை ,அவரின்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ,,இன்னும்சொல்வேன் 

No comments:

Post a Comment