youtube

Friday, August 28, 2015

இந்தகாலத்தில் உண்மையான குருநாதர் கிடைப்பது மிகவும் அரிது ,நான் ஒரு குருநாதர் வேண்டும் என்று ,அன்னை காளிமாதாவின்  சிலை பாதத்தில் பலநாட்கள் முட்டி அழுது இருக்கிறேன் .ஒருநாள்  இருநாள் அல்ல சுமார் இரண்டு மாதங்கள் ,அப்போது ஒருநாள் ,ஒருஅருவிக்கரையில் பகவான் சுவாமி ராமகிருஷ்ணர் ,கனவில் தோன்றினார் .ஆனால் கனவுஎன்பது ,மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் என்பது கொள்கை ,மீண்டும் அன்னையிடம்
போராட்டம் ,பின்சிலநாட்களில் ,பனைக்குளம் ஆத்மசாந்தி நிலையத்தில் இருந்து குருநாதர் அழைத்தார் .அங்கு எனக்கு பல அனுபவங்கள் குறுகிய 
காலத்தில் கிடைத்தது ....நண்பர்களே ,குருவைத் தேடுங்கள் ,அப்படி கிடைக்காவிட்டால் ஏகலைவன்  ஆகுங்கள் அதாவது உங்களுக்கு பிடித்த 
மகான்கள் அல்லது சித்தர்களின் ,உருவப்படத்தை வைத்து ,தீவிரமான 
தியானத்தில் ஈடுபடுங்கள் ,சிலநாட்களில் ,அந்த மகான்களின் ஆத்மா 
உங்களை வழி நடத்தும் .மனிதகுருவையும் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள் உங்களுக்கு இப்போது குரு இருந்தால் அவரை பூரணமாக நம்புங்கள் அவரிடம் குற்றம் காணாதீர்கள் ,அடுத்து தெரியாதவர்களுக் காக ஏகலைவன் கதை 

No comments:

Post a Comment