youtube

Thursday, September 10, 2015

யட்சணி வேண்டுமா ?.யோகினி வேண்டுமா ? வேதாளம் வேண்டுமா ?குரளி
வேண்டுமா எல்லாவற்றிற்கும் எந்திரம் ,மந்திரம் உண்டு அதை முறைப்படி
அமர்ந்து பூஜைசெய்து சித்திசெய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா ?அது இந்தகாலத்தில் நடக்காத காரியம் .எட்சணி வசியம் செய்ய ,முதலில்  ஆவணிமாதம் வளர்பிறையில் ஆரம்பிக்கவேண்டும் .முதலில் சிவபூஜை
செய்யவேண்டும் ,அதன்பிறகு யட்சர்களின் தலைவனான குபேரனை அதற்கு
உரிய முறைப்படி மந்திரம் சொல்லி வணங்க வேண்டும் .பின்னர் ,அரசமரம்
ஆலமரம் ,வில்வமரம் அல்லது நந்தவனம் இவைகளில் ,ஒவ்வொரு யட்சணிக்கும் ஒவ்வொரு மரம் உண்டு அதன் அடியில் ஜெபம் செய்து பூஜையை முடிக்கவேண்டும் இதற்கு மொத்தம் சுமார்குறைந்த பட்சம் ஆறு மாத காலம்  ஆகும் ஒருசக்தி வாழ்க யை அடைய பல இன்னல்களை ஏற்க்கவேண்டும் அப்படி இல்லாமல் ,யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வாங்கநினைத்தால்
ஏமாற்றம் தான் மிஞ்சும் அப்படி ஏமாந்தவர்கள் பலபேரை சந்தித்து இருக்கிறேன் ,உங்களுக்கு சித்துவேண்டும் என்றால் ,மேஜிக் கற்றுக்கொள்ளுங்கள் ,அதைவைத்து அறியாமையில் இருப்பவர்களை
ஏமாற்றி பணம்சம்பாதிக்கலாம் .பழங்காலத்தில் அப்படி ஒருவேளை இருந்து
இருக்கலாம் தற்காலத்தில் தெய்வத்தை நம்பி உங்களுக்கு உரிய வேலையை செய்து உயர்வு அடையப்பாருங்கள் கானல்நீரை நம்பி ஏமாற வேண்டாம்

.............நலமே பெற்று ,வளமாய் வாழ்க .............

No comments:

Post a Comment