youtube

Monday, September 7, 2015

அன்னை மெய் யறிவு  தவநிலைய அடையாள படவிளக்கம் ...முதலில் வட்டங்கள் இந்தபிரபஞ்சத்தை குறிக்கிறது ,அதில் இருக்கும் அயிங்கோனம்
மனிதனைக் குறிக்கிறது .மனிதன் பஞ்சபூதத்தால் ஆனவன் ,அதை குறிக்க
சதுரத்தின் நடுவே ,நகாரம் ,இது மண்தத்துவம் ,அடுத்து பிறைகோ கோணத்தில் மகாரம் இது நீர தத்துவம் ,அடுத்து முக்கோணத்தில் சிகாரம்
அக்கினி தத்துவம் ,அடுத்து அறுகோணத்தில் வகாரம் ,இது வாயு தத்துவம்
இறுதியாக வட்டத்தில் யகாரம் இது மனம் ஆகாய தத்துவம் .அடுத்து கீழே
முதலை ,இது ,முதலையும் ,மூர்க்கனும் கொண்டது விடாது ,என்ற பழமொழிக்கு ஏற்ப பிடிவாதம் அந்த முதலையை போற்று ,ஆன்மீகத்திலும் விடாமல் ஆன்மீகசாதனைகள் மனிதன் பூர ண தத்துவம் அடையலாம் என்பதை உணர்த்தவே ,பூரண கும்பமும் அதில் ஓமென்ற பிரணவம்
ஆகவே உண்மையை அறியுங்கள் ,தனித்திரு விழித்திரு தனிமையில்
தவம் செய்யுங்கள் ..தவத்துக்கு ஒருவரடி ,தமிழுக்கு இருவரடி ,ஆகவே தனிமையில் தவம் செய்தால் சித்துக்கள் உன்னைத்தேடி வரும் நீ சொல்லும்
சொலெல்லாமெ மந்திரம் தான் இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடத்தில் தேடி ஏமாற வேண்டாம் .நலமேபெற்று வளமாய் வாழ்க ...............................

1 comment:

  1. எல்லாரும் ஏமாற்று காரர்கள் தான் யாரிடமும் உண்மை இல்லை

    ReplyDelete