youtube

Friday, September 18, 2015

இல்லறத்தில் ஞானி உண்டு ,துறவியிலும் மூடன் உண்டு .....இன்று இல்லறத்தில் உள்ளவர்கள் ,எத்தனையோ பேர் ,தன்னுடைய குடும்பத்திற்காக படாத பாடுபட்டு உழைகிறார்கள் உண்மையில் அவர்கள் செய்வதும் ஒரு தவம் தான் கடமையை செய்வது ,கர்ம யோகம் ஆகும் ..ராஜ்ய பரிபாலனம்
செய்து ராஜாவாக இருந்த சீதையின் தகப்பனார் ஜனகரை ஞானி என்பார்கள்
பன்னிரெண்டாண்டுகள் தவம்செய்த ,கொங்கணருக்கு ,கோபமாக பார்த்தால்
எதையும் எரிக்கும் சக்தீஇருந்த்து ஆனால் ,தன் கணவனே தெய்வம் என்று
வாழ்ந்த கர்ப்புக்கரசியை எதுவும் செய்யமுடியவில்லை .அதேபோல் தன்
தாய்தந்தைக்கு சேவைசெய்த ,கசாப்புக்கடை காரனும் ஞானி யாக இருந்தான்
ஆன்மீகத்தை வளர்க்கிறேன் என்று ஆஸ்ரமம் அமைத்துஆரண ங்கு களை
வேட்டையாடும் போலிகளைவிட இல்லறதர்மத்தை ஏற்று ,கஷ்டத்தை
அனுபவிக்கும் நீங்களும் ஒருதவ யோகிதான் ..என்றாலும் இன்றும் சில
உத்தம யோகிகள் ,இலை மறைவு கனியாக உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .அவர்களை போற்றுங்கள் வணங்குங்கள்
இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்கிறது என்றால்

உண்டால் அம்ம இவ்வுலகம்  இந்திரர் அமிழ்தம் இயை வதாயினும்
இனிதென தமியர் உண்டலும் இலரே ...........புறநானுறு   

No comments:

Post a Comment