youtube

Monday, January 13, 2014

மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?

மண்டலம் என்பது  நாற்பத்து ஒரு நாட்கள் என்றும் ,,நாற்பத்து ஐந்து நாட்கள்
என்றும் ,நாற்பத்து எட்டு நாட்கள் என்றும் கூ றுவார்கள் .இதை பற்றி தெளிவாக தெரியவில்லை .மூன்று பட்சம் ஒருமண்டலம் என்பார்கள் .
ஒரு வேத பண்டிதர் சொன்னது ..நாற்பத்து ஒருநாட்கள் தான் ஒருமண்டலம்
என்பது எஜமானனின் சௌகரியத்துக்காக நாற்ப்பத்திஎட்டு நாட்கள்வரை நல்லநாளாக பார்த்து பூஜையை நிறைவு செய்யலாம் ....
அடுத்து பெண்கள் அங்க பிரதட்சணம் செய்யலாமா?
பூஜை மணியின் நாவு ,ருத்ராட்சம் வேத நூல்கள் மங்கையரின் தனங்கள்
இன்னும் புனிதமான பொருட்கள் தரையில் படக்கூடாது என்பார்கள் .ஆகவேதான் பெண்கள் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை .
சம்பிராயங்கள் தெரியாத சில சினிமா ,டிவி காரர்கள் படத்தில் பெண்களை
பக்தி என்ற பெயரால் தரையில் உருள விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் .
இந்து மதத்தை இழிவு படுத்தினால் கேட்பதற்கு நாதி இல்லை ..

No comments:

Post a Comment